Homeசெய்திகள்சினிமாஅந்த காட்சிகளில் அவர் ஜாலியாக நடித்தார்.... சூர்யா குறித்து ஜித்து மாதவன்!

அந்த காட்சிகளில் அவர் ஜாலியாக நடித்தார்…. சூர்யா குறித்து ஜித்து மாதவன்!

-

- Advertisement -

இயக்குனர் ஜித்து மாதவன், நடிகர் சூர்யா குறித்து பேசி உள்ளார்.அந்த காட்சிகளில் அவர் ஜாலியாக நடித்தார்.... சூர்யா குறித்து ஜித்து மாதவன்!

ஆவேசம்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சீன்’ திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களும், அவர்களின் சிறப்பான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
​இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், படத்தில் சூர்யா ஏற்று நடித்த நகைச்சுவைக் கதாபாத்திரம் மற்றும் ‘ஏழாம் அறிவு’, ‘சிங்கம்’ ஆகிய படங்களின் ரெஃபரன்ஸ்கள் குறித்துப் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
​”சூர்யா சாரிடம் கதை சொல்லும்போது, படத்தில் காமெடிக்கு என்று தனியாக எந்தக் கதாபாத்திரமும் இல்லை என்று கூறினேன். ‘நீங்களேதான் ஹீரோ, அதேசமயம் காமெடி காட்சிகளையும் நீங்களேதான் செய்யப் போகிறீர்கள்’ என்று சொன்னேன். காட்சிகளைப் பார்த்தபோது, ‘நான் இதுவரை இந்த மாதிரி காட்சிகளில் நடித்ததே இல்லை’ என்று சூர்யா சார் கூறினார். ஆனால், படப்பிடிப்பின் போது அந்த நகைச்சுவைக் காட்சிகளை மிகவும் ஜாலியாக ரசித்து நடித்தார்.

we-r-hiring

​அதேபோல் படத்தில் வரும் ‘ஏழாம் அறிவு’ படத்தின் ரெஃபரன்ஸை சூர்யா சாரே தான் கொடுத்தார். நான் வேறு ஒரு காட்சியைத் திட்டமிட்டிருந்தேன், ஆனால் ‘ஏழாம் அறிவு’ ரெஃபரன்ஸை நான் செய்யட்டுமா என்று அவரே ஆர்வமாகக் கேட்டார். ஆனால், படத்தில் வரும் ‘சிங்கம்’ படத்தின் ரெஃபரன்ஸ் என்னுடைய ஐடியா தான்” என்று ஜித்து மாதவன் தெரிவித்துள்ளார்.

 

MUST READ