மணிரத்னம் – விஜய் சேதுபதி காம்போவின் இஞ்சி வெல்லம் பட ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்திய மேதை, தனது ஒவ்வொரு காட்சியிலும் அழகியலையும் கதையின் ஆழத்தையும் நேர்த்தியாகக் கொண்டுவரும் மாஸ்டர் டைரக்டர் மணிரத்னம். சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் அவர் இயக்கிய ‘தக் லைஃப்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் ஏமாற்றமளித்த நிலையில், இந்த முறை நிச்சயம் ஒரு தரமான கம்பேக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் தனது அடுத்த படைப்பை உருவாக்கியுள்ளார்.
அதன்படி, மணி ரத்னம் இயக்கும் ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ மற்றும் லைக்கா ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் அவிக் முகோபாத்யாய் ஒளிப்பதிவு செய்கிறார்.
மணிரத்னம் – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியின் காம்போவில் உருவாகும் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் டேட் (நவம்பர் 11) இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

