Homeசெய்திகள்சினிமாஆவேசம் - சீன் படங்களின் பார்ட் 2 குறித்து பேசிய ஜித்து மாதவன்!

ஆவேசம் – சீன் படங்களின் பார்ட் 2 குறித்து பேசிய ஜித்து மாதவன்!

-

- Advertisement -

மலையாளத் திரையுலகில் ஃபகத் பாசில் நடிப்பில், இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் ஆவேசம். ஆவேசம் - சீன் படங்களின் பார்ட் 2 குறித்து பேசிய ஜித்து மாதவன்!இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே மிகப்பெரிய கலாட்டாவான வரவேற்பைப் பெற்ற படம். இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கியுள்ள புதிய தமிழ் திரைப்படமான ‘சீன்’ திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி ரிலீஸாகக் களமிறங்கிய இப்படம், பாக்ஸ் ஆபீஸில் இதுவரை 200 கோடி ரூபாயை கடந்து சரவெடியாய் வசூல் செய்து சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இயக்குனர் ஜித்து மாதவன் தொடர்ந்து மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் தீவிரமாக இருந்து வந்தது.ஆவேசம் - சீன் படங்களின் பார்ட் 2 குறித்து பேசிய ஜித்து மாதவன்!இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் ஜீத்து மாதவன் மிகத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். அதன்படி, ‘ஆவேசம்’ மற்றும் ‘சீன்’ ஆகிய இரண்டு படங்களின் இரண்டாம் பாகங்கள் இப்போதைக்கு எப்போதுமே உடனடியாக உருவாக்கப்படாது என்றும், இப்போதைக்கு அதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆவேசம் - சீன் படங்களின் பார்ட் 2 குறித்து பேசிய ஜித்து மாதவன்!இதனால் இப்படங்களின் அடுத்த பாகங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு இது சிறிய ஏமாற்றத்தைத் தந்திருந்தாலும், இயக்குநர் தனது அடுத்தடுத்த புதிய படைப்புகளில் தீவிரம் காட்டி வருவதோடு அந்த படங்களின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் என்று நம்பப்படுகிறது.

 

MUST READ