தனுஷின் ஓம் பட டைட்டில் மாற்றப்பட்டுள்ளது.

தனுஷின் 55 ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஓம். இந்த படத்தை அமரன் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். இதில் தனுஷுடன் இணைந்து மம்மூட்டி, சாய்பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடித்துள்ள முன்னணி கதாபாத்திரங்கள் அனைவருக்குமே வலுவான கதாபாத்திரம் வழங்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. இது தவிர படத்திலிருந்து வெளியான ப்ரோமோ, பாடல்கள் போன்றவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எனவே வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி இந்த படத்தை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் இந்த படத்தின் டிரைலரையும் படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதாவது தணிக்கை குழு பிரச்சனை காரணமாக OM – chapter 1 Udhiram the blood wood என்கிற தலைப்பு O.M – Operation Mole என்று மாற்றப்பட்டுள்ளது.
— -. . / …. — ..- .-. / – — / –. —
#OMTrailer drops at 7 PM TODAY 🔥
#OM worldwide release on November 20.
A @Rajkumar_KP Film.
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @SitharaEnts @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @PenMovies #PenMarudhar @ThinkStudiosInd @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) November 13, 2026

இதனை படக்குழுவினரும் ட்ரைலர் குறித்த அறிவிப்பு ப்ரோமோவை வெளியிட்டதன் மூலம் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர படத்தின் டைட்டில் மாற்றப்பட்டாலும் ஓம் என்பதைச் சுற்றி தான் இந்த படத்தின் கதைக்களம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
