HomeBreaking Newsதங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.920 அதிகரிப்பு!

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.920 அதிகரிப்பு!

-

- Advertisement -

தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கம் விலை, கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று (நவம்பர் 24) தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விலை மீண்டும் உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

சர்வதேசச் சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் தேவை உள்ளிட்ட காரணிகள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால், வரும் நாட்களில் தங்கத்தின் விலை எந்தத் திசையில் பயணிக்கும் என்ற எதிர்பார்ப்பு நகை வாங்குவோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

நில அளவைக் கல்லை தீபத்தூணாக மாற்றுவதா? – ஓய்வுபெற்ற நில அளவை அதிகாரி பாலமுருகன் கேள்வி!

 

MUST READ