HomeBreaking Newsகள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் புகார்: எம்.எல்.ஏ. கைது கோரி உதயநிதி அதிரடி மனு!

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் புகார்: எம்.எல்.ஏ. கைது கோரி உதயநிதி அதிரடி மனு!

-

- Advertisement -

பெண் மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் தவெக எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும் – டிஜிபி அலுவலகத்தில் உதயநிதி மனு!கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் புகார்: எம்.எல்.ஏ. கைது கோரி உதயநிதி அதிரடி மனு!

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, திமுக இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆட்சேபனைக்குரிய குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்தது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ.வை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் டிஜிபி அலுவலகத்திற்குச் சென்று, எம்.எல்.ஏ.வை கைது செய்யக் கோரி மனு அளித்துள்ளார்.

ஏற்கெனவே இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தம்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனத் தெரிவித்துள்ளார்.

 

MUST READ