spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமிழில் சூப்பர் ஹிட் பாடல்கள்… அடுத்து சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் சம்பவம் செய்யும் ஜிவி...

தமிழில் சூப்பர் ஹிட் பாடல்கள்… அடுத்து சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் சம்பவம் செய்யும் ஜிவி பிரகாஷ்!

-

- Advertisement -

தமிழில், சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், மோகன் பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கொரோனா நேரம் என்பதால் இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இருந்த போதிலும் பல மொழி ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படம் பட்ஜெட் விமான பயணத்தை அறிமுகப்படுத்திய டெக்கான் ஏர்வேஸ் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

we-r-hiring

தற்போது அதே கதையில் ஹாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் இந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.  இப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் மற்றும் அபண்டன்சியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது எனவும்
இந்த படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் பாடல்களின் பதிவு நடைபெற்று வருகிறது. மனோஜ் முன்டாசீர் எழுதிய இந்த படத்தின் ஒரு பாடலை மிகாசிங் பாடியுள்ளார். இதனை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழில் ஜிவி பிரகாஷின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

MUST READ