எறும்பு படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
‘போத’ படத்தை இயக்கிய ஜி. சுரேஷ் எறும்பு படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சிறுவர்கள் சத்தி ரித்விக், ஜார்ஜ் மரியான் ,மோனிகா சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் சார்லி, எம் எஸ் பாஸ்கர், பறவை சுந்தராம்பாள், ஜெகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை மன்ட்ரூ ஜிவிஎஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருண் ராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படம் ஒரு கிராமத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் ஆன ‘சிக்கு புக்கு சிக்கு’ எனும் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை குழந்தை நட்சத்திரம் மேக்னா சுமேஷ் பாடியுள்ளார். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இரண்டு மாதங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விடுமுறையில் வீட்டுப்பாடம், டியூஷன் போன்றவை எதுவும் இல்லாமல் தங்களின் விடுமுறையை மகிழ்ச்சியாக அனுபவிப்பது போன்ற வரிகளில் அமைந்துள்ளது. இந்தப் பாடல் குழந்தைகள் அனைவரும் ரசிக்கும் வண்ணம் உள்ளது.