ஜார்ஜ் மரியான், சக்தி ரித்விக் மற்றும் மோனிகா சிவா ஆகியோர் நடிப்பில் எறும்பு என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சார்லி, எம் எஸ் பாஸ்கர், சூசன் சார்ஜ், பரவை சுந்தராம்பாள், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
எறும்பு படம் ஒரு சிறுவனின் வாழ்க்கையை சுற்றி வருகிறது அந்த கதாபாத்திரத்தில் சக்தி ரித்விக் நடித்துள்ளார். படத்தில் அந்த சிறுவன் தனது ஒரு கிராம் மோதிரத்தை தொலைத்து விடுகிறான். அதை கண்டுபிடிப்பது எப்படி தான் என்பது தான் படத்தின் கதை. மோனிகா படத்தில் அவனது சகோதரியாக நடித்துள்ளார். ஜார்ஜ் மரியான் சிறுவனின் நண்பராக நடித்துள்ளார்.
அந்த மோதிரத்தை தனது குடும்பத்திற்காக அந்த சிறுவன் கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். தனது குடும்பம் பொருளாதார ரீதியில் மிகவும் சிக்கலான நிலைமையில் இருக்கும்போது அந்த மோதிரத்தை கண்டுபிடித்தால் தான் அதை தீர்க்க முடியும் என்ற நிலை உருவாகிறது. எறும்பு படம் கிராமத்து கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி அருகில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் படத்தை படமாக்கி உள்ளோம். படத்தில் அண்ணன் தங்கை உறவை நாம் காண முடியும்” என்று படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.