spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தைப் பார்த்து ரசித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தைப் பார்த்து ரசித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தைப் பார்த்து ரசித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN Govt

திருவாரூர் மாவட்டம், காட்டூர் பகுதியில் 7,000 சதுர அடியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

we-r-hiring

நடிகர் ராம் சரண்- உபாசனா தம்பதிக்கு திரைப் பிரபலங்கள் வாழ்த்து!

கலைஞர் கோட்டத்தில் இரண்டு திருமண அரங்கங்களும் முத்துவேலர் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தை பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கவுள்ளார். மேலும், கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.

கலைஞர் கோட்டத் திறப்பு விழா இன்று (ஜூன் 20) மாலை 05.00 மணிக்கு நடைபெற உள்ள நிலையில், காலை 11.30 மணிக்கு ‘மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பேச்சே! எழுத்தே! என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

இந்த பட்டிமன்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கண்டுகளித்தார். அதேபோல், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பட்டிமன்றத்தைக் கண்டுகளித்தனர்.

ஆதிபுருஷ் படத்தை உடனே தடை செய்க! மோடிக்கு கடிதம்

அதைத் தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து தலைமையில் சிறப்பு கவியரங்கமும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ