spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா299 கிமீ வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்...... போஸ்டருடன் வெளியானது TTF வாசன் நடிக்கும் படத்தின் தலைப்பு!

299 கிமீ வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்…… போஸ்டருடன் வெளியானது TTF வாசன் நடிக்கும் படத்தின் தலைப்பு!

-

- Advertisement -

கோவையை பூர்வீகமாகக் கொண்ட TTF வாசன் , twin throttlers எனும் youtube சேனல் மூலம் விலை உயர்ந்த பைக்குகளில் ஒவ்வொரு ஊராக சுற்றுலா சென்று தனது பயணங்களை வீடியோவாக யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். தனக்கென ஒரு இளம் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவரின் யூடியூப் சப்ஸ்கிரைபரின் எண்ணிக்கை மட்டும் 2 மில்லியனை தாண்டி உள்ளது. அதேசமயம் பலமுறை இவர் போக்குவரத்து விதிகளை மீறியதாக காவல்துறை வழக்குகளும் இவர் மீது பதியப்பட்டுள்ளன. இருப்பினும் இவர் மோட்டோ வ்லாகிங்கை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இவ்வாறு பிரபலமடைந்த யூட்யூபர் TTF வாசன் தற்போது தமிழ் திரை உலகில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்றும் அது குறித்து ஜூன் 29ஆம் தேதி TTF வாசனின் பிறந்தநாள் அன்று அறிவிக்கப்படும் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.
அதன்படி TTF வாசன் நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

‘மஞ்சள் வீரன்’ என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை செல்அம் என்பவர் எழுதி இயக்குகிறார். தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
மேலும் 299km/h வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம் என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. TTF வாசன், அந்த போஸ்டரில்
புல்லட் பைக்கில் ஆக்ரோஷத்துடன் ஈட்டி ஒன்றை கையில் ஏந்திய படி இருக்கிறார். இந்த செய்தி TTF வாசனின் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்
இது தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ