spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிப்பின் நாயகன் சூர்யாவின் பிறந்த நாள் ஸ்பெஷல் பதிவு!

நடிப்பின் நாயகன் சூர்யாவின் பிறந்த நாள் ஸ்பெஷல் பதிவு!

-

- Advertisement -

நடிப்பின் நாயகன் சூர்யாவின் 48வது பிறந்தநாள் இன்று.

நடிகர் சூர்யா கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகில் சூரியனாய் மின்னுகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் தனக்கென ஒரு தனி சிம்மாசனத்தை அமைத்திருப்பவர் நடிகர் சூர்யா. இவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு கோடி குரல்கள் எதிரொலியாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார்.

we-r-hiring

ஆரம்ப காலகட்டத்தில் சிவகுமாரின் மகன் என்ற அடையாளம் இவருக்கு இருந்தாலும் அதன் பின் திரைத்துறையில் தனக்கென தனி பாதையை உருவாக்கிக் கொண்டவர்.
கடந்த 1997 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து இவர் நடித்த மூன்று படங்களும் இவரின் பெயரை உச்சரிக்கும் படியான எந்த வெற்றியையும் தரவில்லை.
அதன் பின் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா திரைப்படத்தின் மூலம் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படத்தின் மூலம் இவரின் வேறு பரிமாணத்தை தமிழ் சினிமா பார்க்க ஆரம்பித்தது. தொடர்ந்து ஃபிரண்ட்ஸ், மௌனம் பேசியதே, காக்க காக்க, பேரழகன், பிதாமகன், கஜினி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் புதுப்புது அவதாரத்தில் நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். குறிப்பாக பிதாமகன் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். விக்ரம் மற்றும் சூர்யா இருவரும் வளர்ந்து வரும் காலகட்டத்தில் எந்தவித பாகுபாடும் இன்றி விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார் சூர்யா. தொடர்ச்சியாக 8 வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் ஃபேவரேட் ஹீரோவாக மாறினார்.

மேலும் தனது விடாமுயற்சியால் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்தார். அந்த வகையில் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இருப்பது அயன். இந்த படத்தில் நடனம், ரொமான்ஸ், ஆக்சன் என்ன பல காட்சிகளில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.

வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அப்பா மகன் என்ற இரு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து 90ஸ் கிட்ஸ் களின் வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்திருப்பார். இந்த படத்தை பார்த்து இன்றைக்கும் கூட தன் தந்தையை நினைத்து கண் கலங்காதவர்கள் இல்லை எனலாம். அத்துடன் ஒரு சில படங்கள் எதிர்பாராத அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தனது முயற்சியை கைவிடாமல் புதுமையான கதைகளிலும் உலகத்தரம் வாய்ந்த கதைகளிலும் நடித்திருந்தார். மேலும் சிங்கம், ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றிருந்தார்.

இவரின் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் நேரடியாக ஓடிடியில் வெளியானாலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.குறிப்பாக சூரரைப் போற்றி படத்திற்காக நேஷனல் ஃபிலிம் விருதையும் பெற்றிருந்தார்.

சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம் 10 நிமிடங்களில் திரையரங்கையே அதிர வைத்தது.தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவ்வாறாக நடிப்பின் நாயகனாக திகழும் சூர்யா சினிமா மட்டுமின்றி பொது வாழ்விலும் அக்கறை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலமாக ஆயிரக்கணக்கான ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்கு இன்றும் உதவி வருகிறார்.

திரையில் நல்ல நடிகராகவும் நிஜத்தில் நல்ல மனிதராகவும் சோதனைகள் கடந்து மேலும் பல சாதனைகள் புரிய சூரியாவை நாமும் வாழ்த்துவோம். சூறரை போற்றுவோம்.

MUST READ