Homeசெய்திகள்சினிமாரண தண்டனை குறித்து மீண்டும் விவாதம் தொடங்கும்: 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படத்திற்கு கனிமொழி எம்பி...

ரண தண்டனை குறித்து மீண்டும் விவாதம் தொடங்கும்: ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திற்கு கனிமொழி எம்பி பாராட்டு

-

- Advertisement -

மரண தண்டனைக்கு எதிரான விவாதத்தை மீண்டும் பொதுவெளியில் பேசுபொருளாக்கும் வகையில் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற இரு அவைகளின் குழுத் தலைவருமான கனிமொழி எம்பி பாராட்டு தெரிவித்துள்ளார்.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

we-r-hiring

​கடந்த 1944-ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய பிரபல திரைப்படப் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலைச் சம்பவம் மற்றும் அதன் வழக்கு விசாரணையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தயால் பத்மநாபன் இயக்கத்தில், நடிகர்கள் வெற்றி, பிரிகிடா, கவிதா பாரதி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தில், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் ஜூலை 10-ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த பின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
​”உலகெங்கும் பல தளங்களில் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. மரண தண்டனை என்பது சரியா அல்லது தவறா என்ற விவாதம் நீண்ட காலமாகக் பொதுவெளியில் நீடித்து வரும் சூழலில், அந்த அடிப்படைக் கேள்விகளை முன்வைத்து இந்த முக்கியத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

​மரண தண்டனை குறித்த கேள்விகளை மறுபடியும் பொதுத்தளத்திற்குக் கொண்டு வந்து, சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருத்தை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படத்தைப் படைத்துள்ள படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
​இவ்வாறு கனிமொழி எம்பி தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வழக்குத் திரைப்பட வடிவம் பெற்றுள்ளதால், இது சினிமா வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ