டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தெலுங்கில் புதிய படம் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார், இவர் இயக்குனர் அட்லீயிடம் இணை இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

சிபி சக்கரவர்த்தி தனது முதல் படத்திலேயே 100 கோடி வசூல் கொடுத்து தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். அவரது அடுத்த படத்திற்கு தற்போது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவர் ரஜினி, விஜய் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுக்கு கதை கூறியுள்ளதாகவும் கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் சிபி சக்கரவர்த்தி தெலுங்கு நடிகர் நானியிடம் புதிய படத்திற்காக கதை கூறியுள்ளதாகவும் அதில் நடிக்க நானி சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் என இரு மொழிகளில் உருவாக இருக்கிறதாம். தமிழுக்கு சிவகார்த்திகேயன் போல தெலுங்கில் நானி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் கதைக்களம் தேர்வு மூலமாக பேமிலி ஆடியன்ஸை கைவசம் வைத்திருக்கிறார்.
அட்லீ தற்போது பாலிவுட்டில் களமிறங்கியது போல அவரது சிஷ்யன் சிபி சக்கரவர்த்தி தெலுங்கில் களமிறங்க ஆயத்தமாகி உள்ளார். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


