spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதங்கக் காசு, கறி விருந்து... 'ஜெயிலர்' படத்தில் பணியாற்றிவர்களை அசத்திய கலாநிதி மாறன்!

தங்கக் காசு, கறி விருந்து… ‘ஜெயிலர்’ படத்தில் பணியாற்றிவர்களை அசத்திய கலாநிதி மாறன்!

-

- Advertisement -

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தங்கக் காசு மற்றும் விருந்தளித்துள்ளார் கலாநிதி மாறன்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர்  திரைப்படம் வரலாற்று வெற்றி அடைந்துள்ளது. 700 கோடிக்கு மேல் வியாபாரம் செய்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

we-r-hiring

இந்நிலையில் படத்தின் அசுர வெற்றியை அடுத்து ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் என படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த முக்கிய தூண்களுக்கு உங்களுக்கு என்ன கார் வேண்டுமோ எடுத்துக்குங்க என்று வீட்டின் முன் பல விலையுயர்ந்த கார்களை நிறுத்தி அதில் அவர்களை ஒன்று தேர்வு செய்ய வைத்து பிரமிக்க வைத்தார்கள் கலாநிதிமாறன்.இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்துள்ளது. அதில் படத்தில் பணியாற்றிய அனைவரையும் அழைத்து அவர்களுக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டுள்ளது. மேலும் ஜெயிலர் என்று பொறிக்கப்பட்ட தங்க காசுகளும் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்தில் பணியாற்றிய அனைவரும் இதனால் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கின்றனர்.

படத்தோட வெற்றிக்கு முக்கிய காரணமான தமன்னாக்கு எப்போ கார் கொடுப்பீங்கனு நெட்டிசன்கள் ஒருபுறம் போராட்டம் நடத்தி வருவது சன் பிக்சர்ஸ் காதுக்கு எட்டுமா!?

MUST READ