spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  

-

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சென்னை கிழக்கு மாவட்டம், தளபதி விஜய் மக்கள் இயக்கம், ஆவடி மாநகர தொண்டரணி தலைமை ஏற்பாட்டில், தந்தை பெரியார் அவர்களின் 145 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆவடி செக்போஸ்ட் பகுதியில் பேரணியாக ஆரம்பித்து தளபதி வாழ்க என கோஷமிட்டபடியே ஊர்வலமாக சென்று நந்தவனமேட்டூர் தந்தை பெரியார் சிலையை அடைந்தனர்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

we-r-hiring

பிறகு அவருடைய திரு உருவ சிலைக்கு சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அம்பத்தூர்  G.பாலமுருகன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  அதன்பின், பட்டாசு வெடித்து  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஆவடி மாநகர தொண்டர் அணி தலைவர் தளபதி வி.சங்கர் பாபு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இதில் உறுப்பினர்கள் மற்றும்  பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

MUST READ