spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'இனிமே தொடர்ச்சியாக லியோ அப்டேட் தான்'.....சைமா விருது வழங்கும் விழாவில் லோகேஷ் கனகராஜ்!

‘இனிமே தொடர்ச்சியாக லியோ அப்டேட் தான்’…..சைமா விருது வழங்கும் விழாவில் லோகேஷ் கனகராஜ்!

-

- Advertisement -

லோகேஷ் கனகராஜ், விஜய் நடிப்பில் இயக்கியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், அனுராக் காஷ்யப், என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய், லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த வகையில் சமீப நாட்களாக வெளியான லியோ ஃபர்ஸ்ட் லுக், நான் ரெடி எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள், அர்ஜுன் மற்றும் சஞ்சய்தத் கிளிம்ஸ் போன்றவற்றை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி தீர்த்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் துபாயில் சைமா (2023) விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விக்ரம் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பெற்றுள்ளார். அப்போது பேசிய அவர் லியோ ரிலீஸ்க்கு 30 நாட்கள் முன்பில் இருந்து லியோ பட அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என்று கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இன்று மாலை லியோ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ