spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபார்வதி தேவியாக நடிக்கும் நயன்தாரா..... வெளியான புதிய தகவல்!

பார்வதி தேவியாக நடிக்கும் நயன்தாரா….. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் பாலிவுட்டில் அறிமுகமாகிய ஜவான் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வருகிறது. அதைத்தொடர்ந்து மண்ணாங்கட்டி எனும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

சமீபத்தில் பிரபாஸ் உடன் இணைந்து தெலுங்கில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதன்படி விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி வரும் கண்ணப்பர் திரைப்படத்தில் பிரபாஸ் சிவனாக நடிக்கிறார் என்றும் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா பார்வதி தேவியாக நடிக்க உள்ளார் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

we-r-hiring

ஏற்கனவே கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான யோகி எனும் திரைப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ளார். அதை தொடர்ந்து கடந்த 2011 இல் வெளியான ஸ்ரீ ராம ராஜ்ஜியம் திரைப்படத்தில் நந்த முரி பாலகிருஷ்ணா உடன் இணைந்து சீதா தேவியாக நடித்திருந்தார். இதில் நயன்தாரா தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தற்போது இவர் பார்வதி தேவியாக தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ