Homeசெய்திகள்சினிமாVD12 -லிருந்து விலகிய ஸ்ரீலீலா..... மீண்டும் விஜய் தேவர கொண்டாவிற்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

VD12 -லிருந்து விலகிய ஸ்ரீலீலா….. மீண்டும் விஜய் தேவர கொண்டாவிற்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

-

- Advertisement -

விஜய் தேவர கொண்டா சமந்தா கூட்டணியில் சமீபத்தில் குஷி திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து விஜய் தேவர கொண்டா இயக்குனர் கௌதம் தின்னூரி இயக்கத்தில் VD12 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் தேவர் உண்டாகிறது ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் தற்போது ஸ்ரீலீலா விலகி விடவே அவருக்கு பதிலாக வேறொரு கதாநாயகி விஜய் தேவர கொண்டாவிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

அதன்படி நடிகை ராஸ்மிகா மந்தனா VD12 படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தேவர கொண்டா, ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் ஏற்கனவே கீதகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக விஜய் தேவர கொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் லிவிங் டுகதரில் இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

MUST READ