

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஏழாவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரைத் திறக்க உத்தரவு!
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, அந்த துறையில் வேலைப் பெற்று தருவதாகக் கூறி, பலரிடம் பணம் வாங்கிய வழக்கை அவர் சந்தித்து வருகிறார். இது தொடர்பான நிதி முறைகேடு குறித்த புகாரை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சிறையில் இருந்த படி காணொளி வாயிலாக அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அக்.1- ல் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் அக்டோபர் 13- ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரிக்க, விசாரணை நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் மறுத்த நிலையில், சென்னை முதன்மை நீதிமன்றமே விசாரித்து, முடிவெடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு லஞ்சம் கேட்ட விவகாரம்- விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு!
அதன் அடிப்படையில் நடந்த ஜாமீன் மனு விசாரணை முடிவில், அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்திருந்தார்.
