கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் இணைந்து நடித்துள்ள ஆண்டனி திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.
மலையாளத்தின் மூத்த இயக்குநர் ஜோஷி மற்றும் ஜோஜூ ஜார்ஜ் ஆகியோரது கூட்டணியில் மீண்டும் உருவாகியுள்ள திரைப்படம் ஆண்டனி. படத்திற்கு பிரபல எழுத்தாளர் ராஜேஷ் வர்மா திரைக்கதை எழுதியிருக்கிறார். ஐன்ஸ்டின் சாக் பால் படத்தை தயாரித்துள்ளார். சுஷில்குமார் அகர்வால், நிதின் குமார், கிருஷ்ணராஜ் ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்து உள்ளனர். ரத்த உறவுகளின் எல்லைகளை தாண்யி உணர்வுப்பூர்வமான திரைப்படமாக ஆண்டனி உருவாகி உள்ளது. ‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி உருவாகியுள்ளதால், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தில் ஜோஜூ ஜார்ஜ், கல்யாணி பிரியதர்ஷன், செம்பன் வினோத், நைலா உஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இது தவிர, விஜயராகவன், ஆஷா சரத், ஜினு ஜோசப், அப்பானி சரத், சுதிர், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றநர்.