- Advertisement -
21-ம் நூற்றாண்டில் ஆர்கானிக் வளர்ப்பு முறைகள் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் தொழிலாகும். சீனாவிலும் இந்த தொழில் பிரபலம். கண்ணில் காண்பதை எல்லாம் சாப்பிடும் பழக்கம் கொண்ட சீனர்கள் கரப்பான் பூச்சிகளையும் விட்டு வைக்கவில்லை. சீனா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சி வளர்ப்பு பண்ணைகள் உள்ளன. உலக மக்கள் தொகையை விட பல மடங்கு அதிக எண்ணிக்கையில் கரப்பான் பூச்சிகள் இந்த பண்ணைகளில் வசிக்கின்றன.

ஒரு ஆலையில் வருடத்திற்கு 600 கோடி கரப்பான் பூச்சிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அங்கு இவற்றை பராமரிக்க மனிதர்களுக்கு பதிலாக செயற்கை தொழில்நுட்பம் எனப்படும் ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்ட ரோபோட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. சீனாவில் கரப்பான் பூச்சிகள் மருந்துகள் தயாரிக்கவும் மற்றும் அழகு சாதனபொருட்கள் உற்பத்தி செய்யவும், மற்றும் விலங்குகளுக்கு உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன.


கரப்பான் பூச்சிகளை பண்ணைகளில் நெருக்கடியாக வளர்ப்பது முக சுழிக்க வைக்கும் வகையில் இருந்தாலும், இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டித் தருகின்றன. இதனால், கரப்பான் பூச்சி வளர்ப்பில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, சுவாசப் பிரச்னைகள் மற்றும் இரைப்பை தொடர்பான பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாக இந்த கரப்பான்பூச்சிகள் பயன் அளிக்கின்றன.



