Homeசெய்திகள்சினிமா38 மொழிகளில் வெளியாக காத்திருக்கும் கங்குவா திரைப்படம்

38 மொழிகளில் வெளியாக காத்திருக்கும் கங்குவா திரைப்படம்

-

- Advertisement -
சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படம் 3D அனிமேஷனில் ஒரு வரலாற்று சரித்திர திரைப்படமாக தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல் மற்றும் ராஜமுந்திரில் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதை தொடர்ந்து தற்போது இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து காட்டுப் பகுதியில் நடைபெற இருக்கின்றது. இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாகவும் 25 நாட்கள் இடைவிடாத படப்பிடிப்புகள் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கங்குவா திரைப்படம் தொடக்கத்தில் 10 மொழிகளில் வௌியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 38 மொழிகளில் கங்குவா படத்தை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய மொழிகள் மட்டுமன்றி அனைத்து மொழிகளிலும் படம் வௌியாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

MUST READ