Homeசெய்திகள்சினிமாநேபாள வெள்ளப் பேரழிவு: மன வேதனை அனைவரையும் மீட்க பிரார்த்திக்கிறேன் - நடிகர் சிம்பு உருக்கம்!

நேபாள வெள்ளப் பேரழிவு: மன வேதனை அனைவரையும் மீட்க பிரார்த்திக்கிறேன் – நடிகர் சிம்பு உருக்கம்!

-

- Advertisement -

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு உலகம் முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பேரழிவை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்திற்கு நடிகர் சிலம்பரசன் (சிம்பு) தனது ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் தெரிவித்துள்ளார்.நேபாள வெள்ளப் பேரழிவு: மன வேதனை அனைவரையும் மீட்க பிரார்த்திக்கிறேன் - நடிகர் சிம்பு உருக்கம்!

200-க்கும் மேற்பட்டோர் பலி; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மாயமா?
நேபாளத்தில் ஏற்பட்ட சீற்றமிகு வெள்ளத்தால் ஆற்றங்கரையோர கட்டடங்கள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இப் பேரழிவில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

we-r-hiring

சுற்றுலா மற்றும் யாத்திரைக்காக நேபாளம் சென்ற 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதில் குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களின் நிலை என்னவென்று தெரியாத சூழல் நிலவுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

நடிகர் சிம்புவின் உருக்கமான பதிவு
இந்தத் துயரச் சம்பவம் குறித்து நடிகர் சிம்பு தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பேரழிவைக் காண்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்காகவும், பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும், இன்னும் மீட்கப்படக் காத்திருப்பவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன். அவர்கள் பாதுகாப்பாகவும் வலிமையாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என சிம்பு வெளியிட்டுள்ள இந்த உருக்கமான செய்தி, சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

டாக்ஸிக் விமர்சனம்: கே.ஜி.எஃப்-ஐ மிஞ்சியதா? யஷ் – கீது மோகன்தாஸ் கூட்டணி எப்படி இருக்கு?

MUST READ