Homeசெய்திகள்தமிழ்நாடு11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

-

- Advertisement -

11ம்  மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவித்த நிலையில் தற்போது செய்முறை தேர்விற்கான தேதியையும் பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13-ம் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 14-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி அறிவித்தார்.

we-r-hiring

இந்த நிலையில் பொதுத் தேர்வில் ஒரு பகுதியாக நடத்தப்படும் அறிவியல், மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி தொடங்கி, 10-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்வுத்துறை, பொதுத்தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இந்த மாதம் 31-ம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை  சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கிறார்கள்.

MUST READ