spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு... வில்லன் வேடமே வேண்டாம்...

விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு… வில்லன் வேடமே வேண்டாம்…

-

- Advertisement -
விஜய் சேதுபதி தற்போது தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருகிறார். அதன்படி தமிழ் மட்டும் அல்லாமல் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார். இதற்கிடையில் விஜய் சேதுபதிக்கு தமிழில் புதிய படம் ஒன்றில் கிருத்தி செட்டியுடன் நடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அதனை விஜய் சேதுபதி மறுத்துவிட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான உப்பெணா திரைப்படத்தில் நான் நடித்திருந்தேன். அதில் கிரித்தி செட்டிக்கு தந்தையாக நடித்திருந்தேன். கிருத்தி செட்டி எனக்கு மகளைப் போன்றவர். அதனால் அவருடன் ரொமான்டிக்காக என்னால் நடிக்க முடியாது என விளக்கம் அளித்திருந்தார்.

தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தில் அவர் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமன்றி இந்தியில், கத்ரினாவுடன் இணைந்து கிறிஸ்துமஸ் என்ற படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற சர்வதேச இந்தியதிரைப்பட விழாவில் விஜய் சேதுபதியின் பேச்சு தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அப்போது, ஹீரோக்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதால் மட்டும்தான் வில்லன் வேடத்தில் நடிப்பதாகவும், வில்லன் வேடத்திற்கு நிறைய அழுத்தம் இருப்பதாகவும் கூறியுள்ளார். வில்லனாக நடிக்கும்போது ஹீரோவை விட பவர்புல்லாக இருக்கக்கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறினார். மேலும், தான் நடிக்கும் நிறைய காட்சிகள் கட் செய்யப்பட்டு விடுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால், அடுத்த சில வருடங்களுக்கு அவர் வில்லன் வேடத்தில் நடிக்க மாட்டேன் என உறுதி அளித்துள்ளார்.

MUST READ