தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படம் பரபரப்பாக உருவாகி வருகிறது. விஜயின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி 68 படத்தையும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் விஜயும் யுவன் சங்கர் ராஜாவும் இந்த படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். வழக்கமாக வெங்கட் பிரபு படத்தில் நடிக்கும் வெங்கட் பிரபுவின் குழுவினரும் இப்படத்தில் உள்ளதால் இப்படத்தில் காமெடிக்கும் பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது. அதே நேரம் ஒரு பரபரப்பான அரசியல் கதைக்களமாகவும் இப்படம் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் தந்தை மகன் என இரண்டு கேரக்டர்களில் தளபதி விஜய் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அப்பாவாக வரும் விஜயை டி ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளமையாக காட்ட இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அதன்படி இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விஜய்யை இதுவரை நாம் பார்க்காத அளவுக்கு மிகவும் இளமையான தோற்றத்தில் காட்ட உள்ளனர்.
இளமையான விஜய் படத்தில் வரும் காட்சிகள் முக்கியமான காட்சி என்பதால் அதிகளவு பணம் செலவிடப்பட்டு இக்காட்சிகள் உருவாக்கப்படுகின்றன. மிகவும் குறைவான நேரத்திற்கு , அதாவது வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே விஜயின் இந்த இளமையான தோற்றம் படத்தில் இடம்பெற உள்ளது. ஆனால் இதற்காக 6 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளாராம் வெங்கட் பிரபு. இந்த தகவல் வெளியான நொடியிலிருந்தே தளபதி ஏற்கனவே க்யூட்டாக இளமையாகத்தான் இருப்பார்.உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் தளபதிக்கு இந்த டி ஏஜிங் தொழில்நுட்பமே தேவையில்லை என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த படத்தில் விஜயுடன் இணைந்து லைலா, சினேகா, பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.