spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் கதை இதுதானா!

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் கதை இதுதானா!

-

- Advertisement -

அஜித் கடைசியாக எச்.வினோத் இயக்கிய துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அஜித் தனது 62 வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில நாட்களுக்கு முன்பாக தொடங்கி தற்போது அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் கதை சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது. அதன்படி விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் மற்றும் திரிஷா ஆகிய இருவரும் கணவன்- மனைவியாக நடிக்கிறார்களாம். இவர்கள் இருவரும் ஓரிடத்திற்கு ட்ரிப் சென்றபோது திரிஷா காணாமல் போய்விடுகிறார். தன் உயிருக்கு உயிரான மனைவி த்ரிஷாவை தேடி அலையும் சமயத்தில் திரிஷா வில்லன் கும்பலில் மாட்டியிருப்பது தெரிய வருகிறது. அந்த வில்லன்களிடமிருந்து தனது விடாமுயற்சியின் மூலம் மனைவி திரிஷாவை அஜித் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே விடாமுயற்சி படத்தின் முழு நீள கதையாகும். படத்தின் கதையானது மிகவும் பழைய கதையாக இருந்தாலும் அசத்தலான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாக்கப்படுவதால் படம் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பில் அர்ஜுன் இணைந்துள்ளதாக தகவலும் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் அர்ஜுனுக்கு ஜோடியாக ரெஜினா கசான்ட்ரா நடிப்பதாகவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

MUST READ