Homeசெய்திகள்சினிமாசூரியின் கொட்டுக்காளி படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்... மட்டற்ற மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்...

சூரியின் கொட்டுக்காளி படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்… மட்டற்ற மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்…

-

- Advertisement -
74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்யேக திரையிடலுக்கு கொட்டுக்காளி திரைப்படம் முதல் தமிழ் படமாக தேர்வாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி பல சிறந்த  தமிழ் படங்களை தயாரித்து வருகிறார். கனா படத்தின் மூலமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இதுவரை 5 படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி.

we-r-hiring
கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா,  படங்களின் வரிசையில், ‘கூழாங்கள்’ படத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சென்று சர்வதேச விருதுகளை வாங்கிய பி.எஸ் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்குகிறார். விடுதலை படத்திற்கு பிறகாக சூரி இந்த படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள பிரபலம் அன்னா பென் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்யேக திரையிடலுக்கு கொட்டுக்காளி திரைப்படம் முதல் தமிழ் படமாக தேர்வாகியுள்ளது. இந்த செய்தி மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

MUST READ