கடந்த 2002 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் மௌனம் பேசியதே திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சூர்யா மற்றும் திரிஷா கூட்டணியில் இப்படம் உருவாகியிருந்தது. குறிப்பாக த்ரிஷா கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் மௌனம் பேசியதே திரைப்படம் தான். இந்நிலையில் சமீபத்தில் மௌனம் பேசியதே திரைப்படம் ரிலீஸ் ஆகி 21 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு சூர்யா மற்றும் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
அதேசமயம் நடிகை திரிஷாவும் தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் உள்ளிட்ட பலருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் நடிகை திரிஷா வேண்டும் என்று அமீரின் பெயரை தவிர்த்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இவரெல்லாம் ஒரு கதாநாயகியா என்று பலரும் விமர்சித்த திரிஷா தான் இன்று உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார் என்று பலரிடம் திரிஷா குறித்து பெருமையாக பேசி உள்ளாராம் இயக்குனர் அமீர். ஆனால் திரிஷா அப்படிப்பட்ட அமீரின் பெயரையே வேண்டுமென்றே தவித்து இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
அதாவது தற்போது பருத்திவீரன் விவகாரத்தில் அமீருக்கும் சூர்யாவிற்கும் சிறிய மனக்கசப்பு இருப்பதனால் திரிஷா, அமீரின் பெயரை தவிர்த்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் திரிஷா, பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்ப பெற்று பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித், விஜய் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அந்த வகையில் இனி வரும் காலத்தில் சூர்யாவுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதால் திரிஷா இப்படி செய்தாரா? அல்லது
திரிஷா தற்போது உச்ச நட்சத்திரமாக வளம் வருவதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது இயக்குனர் அமீர் தான் என்பதை மறந்துவிட்டு இப்படி செய்தாரா? இதுதான் திரிஷா அமீருக்கு காட்டும் நன்றி விஸ்வாசமா? என்று பலரும் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


