spot_imgspot_imgspot_imgspot_img
HomeRewind 2023#Rewind2023: 2023ம் ஆண்டின் IMDb ரேட்டிங் வரிசையில் டாப்-10 தமிழ் திரைப்படங்கள்!

#Rewind2023: 2023ம் ஆண்டின் IMDb ரேட்டிங் வரிசையில் டாப்-10 தமிழ் திரைப்படங்கள்!

-

- Advertisement -

தமிழ் சினிமா ஒவ்வொரு ஆண்டும் வேறொரு தளத்திற்கு தன்னை மாற்றிக்கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறது. புதிய இயக்குனர்கள், புதிய கதைகள், புதிய ஐடியாக்கள் என ஒவ்வொரு வருடம் மெருகேறிக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் இந்த 2023-ம் ஆண்டும் தமிழ் சினிமா பல தரமான படைப்புகளைக் கொடுத்துள்ளது. அந்த வகையில் பிரபல IMDb தளத்தின் ரேட்டிங் அடிப்படையில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள “டாப்-10 திரைப்படங்கள்” என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.2023 ம் ஆண்டின் IMDb ரேட்டிங் வரிசையில் டாப்-10 தமிழ் திரைப்படங்கள்!

1. அயோத்தி, விடுதலை (Rating -8.3)

we-r-hiring

சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான மனித நேயம் பேசும் ஃபீல் குட் படமான “அயோத்தி” ரசிகர்களின் மனதைக் கவர்ந்து மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

வெற்றிமாறன், சூரி,விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான “விடுதலை” சமூக அக்கறையுடன் கூடிய தரமான படமாக அமைந்து வெற்றியைப் பதிவு செய்தது. இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

2. டாடா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (8.2)

கணேஷ்.கே.பாபு இயக்கத்தில், கவின் நடிப்பில் வெளிவந்த ஃபீல் குட் படமான டாடா பெருவாரியான இளைஞர்களின் ஆதரவுடன் ஹிட் அடித்தது.

சினிமாவின் பலம் என்ன என்பதையும், சினிமாவுக்கு தொடர்பில்லாத இருவரை சினிமாவே தேர்ந்தெடுத்து அதனால் ஏற்படும் மாற்றங்களை நேர்த்தியாகச் சொல்லியிருந்த படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் படத்தை இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.2023 ம் ஆண்டின் IMDb ரேட்டிங் வரிசையில் டாப்-10 தமிழ் திரைப்படங்கள்!

3. போர்த்தொழில் (8.3)

அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான படம் “போர்த்தொழில்“. சீட்டின் நுனியில் அமர வைக்கும் படியான திரில்லர் படமாக அமைந்து மாபெரும் வெற்றியைப் பெற்றது.

4. குட் நைட் (7.7)

மணிகண்டன், மீரா ரகுநாத் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்த படம் “குட் நைட்“. மென்மையான ஃபீல் குட் படமான இப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

5. மாவீரன் (7.4)
சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து, மடோன் அஷ்வின் இயக்கத்தில் வித்தியாசமான ஃபேண்டஸி படமாக வெளியான மாவீரன் வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் வெற்றிப் படமாக அமைந்தது.2023 ம் ஆண்டின் IMDb ரேட்டிங் வரிசையில் டாப்-10 தமிழ் திரைப்படங்கள்!

6. வாத்தி, பொன்னியின் செல்வன் 2 (7.3)

தனுஷ் நடிப்பில் தமிழ்- தெலுங்கு மொழிகளில் வெளியான “வாத்தி” திரைப்படம் கல்வியின் முக்கியத்துவத்தைக் கமர்சியலாக எடுத்துக் கூறி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் பாகம் 1-ன் தொடர்ச்சியாக வெளியான படம் பொன்னியின் செல்வன்-2. மல்டி ஸ்டாரர் படமாக உருவான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றது.

7. ஜெயிலர்(7.1)
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான “ஜெயிலர்” 600 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக மாறியது. மேலும் அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்திருந்தது.2023 ம் ஆண்டின் IMDb ரேட்டிங் வரிசையில் டாப்-10 தமிழ் திரைப்படங்கள்!

8. லியோ (7)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “லியோ” படம் வசூலில் ஜெயிலரைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. லியோ படம் சுமார் 620 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ளது.

9. பத்து தல (6.9)

சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான “பத்து தல” படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று ஓரளவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

10. மார்க் ஆண்டனி, மாமன்னன் (6.7)

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் டைம் ட்ராவல் கேங்ஸ்டர் படமாக வெளியான மார்க் ஆண்டனி 100 கோடிக்கு மேல் வசூலித்து எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு கூட்டணியில் உருவான அரசியல் படமான “மாமன்னன்” மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிப் படமாக மாறியது.2023 ம் ஆண்டின் IMDb ரேட்டிங் வரிசையில் டாப்-10 தமிழ் திரைப்படங்கள்!

இதைத் தவிர 2023 ஆம் ஆண்டின் மாபெரும் வெற்றி பெற்ற படங்களான விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் IMDb யில் 6.1 ரேட்டிங்கை பெற்றுள்ளன.

MUST READ