Homeசெய்திகள்சினிமாமிர்ச்சி சிவா, ராம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்....சத்தமே இல்லாமல் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

மிர்ச்சி சிவா, ராம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்….சத்தமே இல்லாமல் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

-

- Advertisement -

மிர்ச்சி சிவா, ராம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்....சத்தமே இல்லாமல் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!இயக்குனர் ராம், கற்றது தமிழ், தங்க மீன்கள் பேரன்பு உள்ளிட்ட காலத்தால் அழிக்க முடியாத வெற்றி படங்களை கொடுத்தவர். எதார்த்தமான கதையம்சத்தை கொடுத்து எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் இயக்குனர் தான் ராம். அந்த வகையில் இயக்குனர் ராம் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோரின் நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ரிலீசுக்கு முன்பாகவே இப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

அதே சமயம் இயக்குனர் ராம் மிர்ச்சி சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வரும் இந்த படம் சில மாதங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. கோயம்புத்தூர் பகுதியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இப்படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

சென்னை 600028, தமிழ் படம், கலகலப்பு போன்ற படங்களில் மூலம் பிரபலமான மிர்ச்சி சிவா. கடைசியாக இவர் வெங்கட் பிரபு இயக்கிய பார்ட்டி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து சூது கவ்வும் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

MUST READ