Homeசெய்திகள்சினிமாகேப்டன் மில்லர் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு!

கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு!தனுஷ் தற்போது பல படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அதேசமயம் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். மேலும் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இதற்கிடையில் தனுஷ் கேப்டன் மில்லர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக உருவாகியுள்ள இப்படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பு படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் உன் ஒளியே எனும் இரண்டாவது பாடல் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் வீடியோ ஒன்றை வெளியிட்ப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ப்ரோமோவில் இருந்து இந்தப் பாடல் மெலடி பாடல் என்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்பாடல் தனுஷுக்கும் பிரியங்கா மோகனுக்குமான பாடல் என்பது போல் தெரிகிறது.
இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் 2024 பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ