spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவைபவ் நடிக்கும் புதிய படம்... சிறப்பாக நடைபெற்ற பூஜை!

வைபவ் நடிக்கும் புதிய படம்… சிறப்பாக நடைபெற்ற பூஜை!

-

- Advertisement -

வைபவ் நடிக்கும் புதிய படம்... சிறப்பாக நடைபெற்ற பூஜை!வைபவ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் வைபவ் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028- 2, கோவா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் கப்பல், மேயாத மான், பபூன், லாக்கப் , மலேசியா டு அம்னீசியா போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து பெயர் பெற்றார். கடைசியாக இவர் ஆலம்பனா எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் வைபாவ் முனீஸ் காந்த், பார்வதி நாயர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த வாரம் வெளியாக இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வைபவ் நடிக்கும் புதிய படம்... சிறப்பாக நடைபெற்ற பூஜை!

we-r-hiring

இந்நிலையில் நடிகர் வைபவ் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அதன்படி விக்ரம் ராஜசேகர் இயக்க உள்ள புதிய படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடிகை அதுல்யா நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த பூஜையில் வைபவ், ஆனந்தராஜ், அதுல்யா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்த படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த பூஜை சம்பந்தமான வீடியோவையும் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இப்படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ