இயக்குனர் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில், ராமதாஸ், ஹரிஜா, யாஷிகா ஆனந்த், எரும சாணி விஜய் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நகைச்சுவை கலந்த ஹாரர் திரைப்படம் “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது”. கோபி சுதாகர், ஜார்ஜ் மரியான், முனீஸ் காந்த், ரித்விகா, மதுமிதா உள்ளிட்டோரும்
இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் பிப்ரவரி 15, 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் ஏற்கனவே ரிலீஸ் ஆகி இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தியேட்டரில் 18+ படத்தை பார்க்கச் செல்லும் இளைஞர்கள் அங்குள்ள பேயிடம் மாட்டிக் கொள்கின்றனர். அங்கிருந்து எப்படி அவர்கள் தப்பித்தார்கள் என்பதே படத்தின் கதை. முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்திய படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், (டிசம்பர் 23) இன்று வெளியிட உள்ளார். பிரபல யூட்யூப் சேனலான “எரும சாணி” குழுவினரிடமிருந்து இப்படம் வெளியாவதால் இளைஞர்களுக்கு ஏற்றது போல முழுக்க முழுக்க காமெடியாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது.
கௌசிக் க்ரிஷ் இதற்கு இசை அமைக்க ஜோசுவா ஜே பெரஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிலாப் போட் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது.