- Advertisement -
கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த், உடல்நிலை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகி்ச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டு, சுவாசிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதனால், அவருக்கு செயற்கை சுவாசமும் அளிக்கப்பட்டது. இருப்பினும் பலன் இல்லாம்ல அவர் இன்று காலை 6 மணிக்கு உயிரிழந்தார்.

விஜயகாந்த் மறைவால் ரசிகர்களும், திரை பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய வருத்தங்களை கண்ணீரோடு வௌிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் விஜயகாந்த் பற்றிய செய்திகள் தான் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் தங்கள் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன் 🙏 MISS U CAPTAIN @iVijayakant 💔 pic.twitter.com/2hz0hyyXqz
— Mari Selvaraj (@mari_selvaraj) December 28, 2023



