spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் 'மஹாராஜா'..... ரிலீஸ் குறித்த அப்டேட்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘மஹாராஜா’….. ரிலீஸ் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் 'மஹாராஜா'..... ரிலீஸ் குறித்த அப்டேட்!தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி ஒரு பக்கம் ஹீரோவாகவும் இன்னொரு பக்கம் வில்லனாகவும் மிரட்டி வருகிறார். அந்த வகையில் தமிழ், இந்தி மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கிறார். விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் வெளியாகி ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து மிஸ் பண்ண இயக்கத்தில் ட்ரெயின் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இதற்கிடையில் விஜய் சேதுபதி, குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் மஹாராஜா திரைப்படத்தில் நடித்துள்ளார். இது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், அபிராமி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அஜனிஷ் லோக்நாத் இசையமைக்க தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். சில நாட்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் அதைத் தொடர்ந்து தாறுமாறான ட்ரெய்லரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக ஏற்றிவிட்டது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் 'மஹாராஜா'..... ரிலீஸ் குறித்த அப்டேட்!மேலும் விஜய் சேதுபதியின் பிறந்த தினமான நேற்று மகாராஜா படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியாகி கவனம் பெற்றது.

we-r-hiring

இந்நிலையில் படக்குழுவினர்கள் இப்படத்தை பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ