spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுபரபரப்பு....த்ரில்....சூப்பர் ஓவர்கள்.....வெற்றி!

பரபரப்பு….த்ரில்….சூப்பர் ஓவர்கள்…..வெற்றி!

-

- Advertisement -

 

பரபரப்பு....த்ரில்....சூப்பர் ஓவர்கள்.....வெற்றி!
Photo: BCCI

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டி டை ஆனதால் இரு சூப்பர் ஓவர்கள் நடைபெற்றன. போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்ட நிலையில், அந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

we-r-hiring

அவசரத்திற்கு உதவும் சில மருத்துவ குறிப்புகள்!

வெற்றியைத் தீர்மானிக்க மீண்டும் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 121 ரன்களையும், ரிங்கு சிங் 69 ரன்களையும் எடுத்தனர்.

ஆரோக்கியமான ஃப்ரூட் ரைஸ் செய்வது எப்படி?

பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்ததால் போட்டி சமன் ஆனது. பின்னர் முதல் சூப்பர் நடத்தப்பட்ட போட்டியிலும் சமன் ஆன நிலையில், இரண்டாவது போட்டியில் தான் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. அத்துடன், இந்திய அணி தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

MUST READ