Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அவசரத்திற்கு உதவும் சில மருத்துவ குறிப்புகள்!

அவசரத்திற்கு உதவும் சில மருத்துவ குறிப்புகள்!

-

- Advertisement -

மருத்துவ குறிப்புகள்:அவசரத்திற்கு உதவும் சில மருத்துவ குறிப்புகள்!வேப்பம்பூ ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும். எனவே வேப்பம் பூவை பறித்து சாப்பிட்டு வரலாம்.

அதே சமயம் வெள்ளை பூண்டு களை வென்று சாப்பிட்டு வர ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

அத்திப்பிஞ்சில் குழம்பு செய்து சாப்பிட்டு வர பெண்களின் மாதவிடாயின் போது ஏற்படும் பெரும்பாடு குறையும்.

தாமரைக் கிழங்கை பொரியல் அல்லது கறி செய்து சாப்பிட்டு வர மூல ரோகம் குணம் அடையும்.

வெங்காயம், தேங்காய் பால், கற்கண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சுண்ட காட்சி பருகி வந்தால் வறட்டு இருமல் குணமடையும்.

செவ்வந்திப் பூக்களை பச்சடி செய்து சாப்பிட்டு வர சிறுநீர் நன்கு கழியும். குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு இது மிகவும் நல்லது.

செம்பருத்தி பூவை சிறிதளவு தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் அந்த நீரை பருகிவர கர்ப்ப காலங்களில் ஏற்படும் கால் வீக்கம் குணமடையும்.அவசரத்திற்கு உதவும் சில மருத்துவ குறிப்புகள்!

வாழைப்பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வர குழந்தை இல்லாத பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அதேபோன்று செவ்வாழைப்பழம் ஒன்றை தினமும் சாப்பிட்டு வருவதனால் கருமுட்டை வளர்ச்சி அடைந்து கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கினை சரி செய்ய ஓமத்தை வறுத்து வேகவைத்து அதில் செலுத்த தேன் சேர்த்து கொடுக்க விரைவில் குணமடையும்

வெந்தயத்தை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அது நீரழிவு நோயை கட்டுப்படுத்தும்.அவசரத்திற்கு உதவும் சில மருத்துவ குறிப்புகள்!

சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர உடல் வீக்கம், சிறுநீர் எரிவு, சலக்கடுப்பு போன்றவை நீங்கும். சிறுநீர் தாராளமாக கழியும்.

இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ