spot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இயற்கை முறையில் உங்கள் மாடி தோட்டத்தை மேம்படுத்த வேண்டுமா? சூப்பர் வழிகள்! இதோ…

இயற்கை முறையில் உங்கள் மாடி தோட்டத்தை மேம்படுத்த வேண்டுமா? சூப்பர் வழிகள்! இதோ…

-

- Advertisement -

இயற்கை முறையில் மாடித்தோட்டத்தை மேம்படுத்த சில எளிய இயற்கை வழிகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.இயற்கை முறையில் உங்கள் மாடி தோட்டத்தை மேம்படுத்த வேண்டுமா? சூப்பர் வழிகள்! இதோ…உர மேலாண்மை

  1. அரிசி மற்றும் பருப்பு கழுவும் நீரை செடிகளுக்கு ஊற்றலாம் அல்லது ஸ்ப்ரே செய்யலாம்.
  2. முட்டையினை வேக வைத்த நீரை குளிர வைத்து இன்டோர் பிளாண்ட்ஸில் தெளிக்கலாம். முட்டை ஓட்டை பொடியாக்கி சுத்தம் செய்து உரமாகப் பயன்படுத்தலாம். (வேக வைத்தது வேண்டாம்).
  3. காய்கறி, வெங்காயம், பூண்டு கழிவு நீரை ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி பின்னா் அதனை செடிகளுக்கு ஊற்றலாம். காய்கறி கழிவுகளை காயவைத்து உரம் தயாரிக்கலாம். மண் மற்றும் மண்புழு உரம் சேர்த்து கிளறி வைக்கலாம். இதனால் ஒரு மாதத்தில் இயற்கை மண்புழு உரம் நமக்குக் கிடைக்கும்.
  4. வாழைப்பழத் தோலினை காய்கறி தொட்டிகளில் போடலாம். இது மக்னீசியம் சத்து நிறைந்தது பழத் தோல் நீரை இரண்டு நாள் ஊறவைத்து செடிகளுக்கு ஸ்ப்ரே செய்யலாம்.
  5. கோல்டன் வாட்டர் (Golden Water) உரத் தண்ணீரை சாதாரணத் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றினால் பூக்கள், காய்கள் அதிகம் கிடைக்கும்.
  6. டீ மற்றும் காபி தூளை வெயிலில் உலர்த்தி வாரம் ஒருமுறை செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். காய்ந்த இலைகளை மாதம் ஒருமுறை சேகரித்து செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம்.

செடிகள் வளர்க்கும் வழிமுறைகள்

we-r-hiring
  1. சிறிய தொட்டிகளில் கீரை வகைகளை விதைத்து வாரம் ஒருமுறை அறுவடை செய்யலாம். சிறு கீரை வகைகளை கலந்து விதைத்தால் நல்ல விளைச்சல் பெறலாம். பாலக் போன்ற கீரைகளை பெரிய தொட்டிகளில் வளர்க்கலாம். கீரையை பறிக்கும்போது தண்டுகளை விட்டுப் பறித்தால் மீண்டும் புதிய தளிர்கள் விட உதவும். சிறு தொட்டிகளில் மணத்தக்காளி கீரையை விதைத்தால் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள முடியும்.
  2. தக்காளி நாத்தை ஒரு தொட்டிக்கு இரண்டு வீதம் வைத்து கம்பி அல்லது கயிறு கட்டிவிட்டால் நிலத்தில் படராமல் வளர உதவும். மிளகாய் நாத்தை 2 அல்லது 3 வீதம் ஒரே தொட்டியில் நடுவது நல்லது. 3. புதினா கிளையை சிறிய தொட்டிகளில் வெயில்படும் இடத்தில் வைத்து வளர்க்கலாம்.
  3. காய்கறி செடிகளுக்கு மத்தியில் மேரிகோல்டை (சாமந்தி) நடுவில் வைத்தால் அழகும் புத்துணர்ச்சியும் அளிப்பதோடு, பூச்சிக் கட்டுப்பாடு அதிகரிக்கும்.
  4. டேபிள் ரோஜா செடியை வீட்டின் ஜன்னல் அருகில் வைக்கலாம். பாகல் போன்ற கொடி வகைகளை கம்பி, கயிறு கட்டி வளர்க்கலாம். கத்தரி, வெண்டை, முள்ளங்கி போன்றவற்றை எளிதில் வளர்க்கலாம். 6. துளசி, கற்பூரவல்லி போன்ற மூலிகை செடிகளையும் சிறு தொட்டிகளில் வளர்க்கலாம்.

பூச்சிகள் வருவதை கட்டுப்படுத்துவது

  1. பெருங்காயத்துடன் புளித்த மோர் கலந்து தண்ணீர் சேர்த்துத் ஸ்ப்ரேயாக தெளிக்கலாம்.
  2. இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய் மூன்றையும் ஒன்றாக சோ்த்து அரைத்து அதைத் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஸ்ப்ரே செய்யலாம்.
  3. லெமன் லிக்விட் அல்லது எலுமிச்சைச் சாற்றினை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
  4. பேக்கிங் சோடாவுடன் உப்பு சேர்த்து நன்கு தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஸ்ப்ரே செய்யலாம்.

தினமும் 25 கிராம் கேரட் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

MUST READ