ஃப்ரூட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
நெய் – 4 தேக்கரண்டி
பட்டை – 2
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
பிரியாணி மசாலா – 1 தேக்கரண்டி
அண்ணாச்சி பழம், ஆப்பிள், திராட்சை – ஒரு கப்
புதினா, கொத்தமல்லி இலை – சிறிதளவு
மிளகாய் தூள் தேவைக்கு ஏற்ப
உப்பு – தேவைக்கு ஏற்ப

ஃப்ரூட் ரைஸ் – செய்முறை:
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அதே சமயம் அரிசியை நன்கு கழுவி கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றி காய வைக்க வேண்டும்.
நெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
அதன் பின் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறி விட வேண்டும். அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும்.
பச்சை வாசனை போன பின்பு பிரியாணி மசாலா, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதன் பின் பழங்களை சேர்க்க வேண்டும். ஒரு கொதி வந்தபின் ஊற வைத்த அரிசியை சேர்க்க வேண்டும்.
தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின் பாத்திரத்தை மூடி 20 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக வைக்க வேண்டும்.
20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது சுவையான ஆரோக்கியமான ஃப்ரூட் ரைஸ் ரெடி.