நவீன கால விலைவாசி உயர்வு மற்றும் கடுமையான பொருளாதாரச் சூழலில், சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவோடு இருப்போருக்கான ஒரு அருமையான வழிகாட்டுதல் தற்போது வெளியாகியுள்ளது. பெரிய அளவில் லட்சக்கணக்கில் முதலீடு செய்யத் தேவையில்லாமல், நம்மிடம் உள்ள குறைந்தபட்ச தொகையைக் கொண்டு எவ்வாறு வெற்றிகரமாக வியாபாரம் செய்வது என்பது குறித்து விரிவானதொரு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வெறும் ரூ.50,000-க்குள் வீட்டிலிருந்தபடியே எவரும் எளிதாகத் தொடங்கக்கூடிய அந்த 4 நவீன வணிக வாய்ப்புகள் மற்றும் அதன் முழுமையான லாபக் கணக்குகள் குறித்த விரிவான செய்தி தொகுப்பு பின்வருமாறு.
கஸ்டமைஸ்டு கிப்ட் மற்றும் பிரிண்டிங் பிசினஸ் (Customised Gift & Printing Business)
இன்றைய நவீன காலகட்டத்தில் பிறந்தநாள், ஆண்டுவிழாக்கள் மற்றும் பல்வேறு சிறப்பு விசேஷங்களுக்குச் சாதாரண கடைகளில் விற்கும் வழக்கமான பரிசுப் பொருட்களை வாங்குவதை விட, தங்களது விருப்பத்திற்கேற்ப பெயர் மற்றும் புகைப்படங்களுடன் தனித்துவமாகக் கஸ்டமைஸ்டு செய்யப்பட்ட கிப்ட்ஸ்களை வாங்குவதையே மக்கள் தற்காலத்தில் அதிகம் விரும்புகின்றனர்.

- முதலீடு மற்றும் அமைப்பு: இந்தத் தொழிலைத் தொடங்கப் பெரிய அளவில் தனிக்கடையோ அல்லது மாதாந்திர வாடகைச் சுமையோ தேவையில்லை. நம்மிடம் உள்ள ரூ.50,000 பட்ஜெட்டில், சப்லிமேஷன் மெஷின் மற்றும் ஆரம்பக் கட்டத் தேவையான மூலப்பொருட்கள் வாங்குவதற்கு வெறும் ரூ.12,000 மட்டுமே முதலீடு செய்தால் போதுமானது.
- லாபக் கணக்கு: ஒரு பிளைன் மக் மற்றும் இதர தயாரிப்புச் செலவுகள் போக அதன் அடக்க விலை ரூ.60 ஆனாலும், சந்தையில் இது ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரே ஒரு பொருளுக்கு ரூ.150 முதல் ரூ.190 வரை அபாரமான லாபம் பார்க்க முடியும்.

ஹோம்மேட் பிரீமியம் மசாலா மற்றும் ஹெல்த் மிக்ஸ் (Homemade Masala & Health Mix)
வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களிலோ அல்லது பாக்கெட்டுகளில் விற்கும் மசாலாக்களிலோ கலப்படம் இருக்குமோ என்ற அச்சம் நுகர்வோர் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் தற்போது நூறு சதவீதம் இயற்கையான மற்றும் பாரம்பரியமான வீட்டுத் தயாரிப்புப் பொருட்களையே தேடிப்பிடித்து வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- முதலீடு மற்றும் அமைப்பு: இதற்குப் பெரிய அளவிலான கனரக எந்திரங்கள் (Machineries) எதுவும் தேவையில்லை. உங்களிடம் உள்ள பட்ஜெட்டில் தரமான மூலப்பொருட்கள் வாங்குவது, பேக்கிங் பொருட்கள் மற்றும் FSSAI உணவுப் பாதுகாப்புச் சான்றிதழ் பெறுவது எனச் சேர்த்து மொத்தம் ரூ.10,000 முதலீடு போதுமானது.
- லாபக் கணக்கு: எவ்வித இரசாயனமும் கலக்காமல் சுத்தமான முறையில் மசாலாக்களைத் தயாரித்து விற்கும் போது, 150 சதவீதம் வரை லாபம் ஈட்ட முடியும். இதன் மூலம் இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தபடியே மாதந்தோறும் நிலையான மற்றும் நல்ல வருமானம் ஈட்டலாம்.

ஆன்லைன் ரீசெல்லிங் பொட்டிக் (Online Reselling Boutique)
பாரம்பரியமாகத் துணிக்கடை தொடங்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் அட்வான்ஸ் மற்றும் பெரிய அளவில் ஆடைகளை வாங்கி ஸ்டாக் வைக்க வேண்டும் என்ற நிலை மாறி, தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மிக எளிய முறையில் ஆன்லைன் பொட்டிக் வணிகத்தை வெற்றிகரமாக நடத்த முடியும்.
- முதலீடு மற்றும் அமைப்பு: பெரிய அளவில் ஸ்டாக் வைக்கத் தேவையில்லை என்றாலும், வாடிக்கையாளர்களுக்குத் தரத்தைக் காட்டுவதற்காகச் சில ட்ரெண்டிங் குர்த்திகள் அல்லது சேலைகளை முன்கூட்டியே வாங்கி வைப்பதற்கும், இன்ஸ்டாகிராம் விளம்பரங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.15,000 முதலீடு தேவைப்படுகிறது.
- லாபக் கணக்கு: தரமான ஆடைகளைச் சரியான முறையில் ஆன்லைனில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்வதன் மூலம் ஒரு டிரஸ்ஸிற்கு குறைந்தபட்சம் ரூ.200 வரை நேரடி லாபம் பார்க்க முடியும்.
மொபைல் மற்றும் கேட்ஜெட்ஸ் அக்சசரீஸ் (Mobile & Gadgets Accessories)
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு இல்லாத மனிதர்களே இல்லை என்ற சூழல் நிலவுகிறது. இதனால் பேக் கவர், டெம்பர் கிளாஸ் மற்றும் ஏர்போன் போன்ற மொபைல் அக்சசரீஸ்களுக்கு எப்போதுமே சந்தையில் நல்ல வரவேற்பும் இடைவிடாத டிமாண்டும் உள்ளது.
- முதலீடு மற்றும் அமைப்பு: மொத்த விலையில் (Wholesale) மலிவான விலையில் மொபைல் அக்சசரீஸ் பொருட்களை வாங்கி விற்க, இந்தத் தொழிலுக்கு ஆரம்பகட்ட முதலீடாக வெறும் ரூ.10,000 மட்டுமே தேவைப்படுகிறது.
- லாபக் கணக்கு: ரூ.30 முதல் ரூ.40 வரை அடக்க விலை கொண்ட மொபைல் கவர்களைச் சந்தையில் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்வதால், 200 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தை ஈட்டித் தரும் மிகச் சிறந்த தொழிலாக இது விளங்குகிறது.

ஸ்மார்ட் மார்க்கெட்டிங் மற்றும் நேர மேலாண்மை: வெற்றி பெறுவது எப்படி?
இந்தத் தொழில்களைத் தொடங்குவதற்குப் பெரிய அளவில் விளம்பரச் செலவுகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் ‘பிகைன்ட் தி சீன்ஸ்’ (Behind the Scenes) போன்ற தயாரிப்புமுறை வீடியோக்களைப் பதிவிடுவதன் மூலம் ஒரு பைசா செலவு இல்லாமல் வாடிக்கையாளர்களை எளிதில் ஈர்க்கலாம். மேலும், உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கே சென்று வழங்கும் ‘ஹைப்பர் லோக்கல்’ (Hyper Local) முறையைக் கையாள்வதன் மூலமும், தினசரி சில மணிநேரங்களை மட்டும் திட்டமிட்டுச் செலவிடுவதன் மூலமும் இந்த வணிகத்தை வெற்றிகரமாக விரிவுபடுத்தி மாதம் ரூ.50,000-க்கும் மேல் லாபம் ஈட்ட முடியும் என்று இந்த வீடியோவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
