Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நரை முடி மீண்டும் கருப்பாக மாறுமா? மருத்துவ உலகை வியக்க வைத்த உண்மையும், காரணங்களும்!

நரை முடி மீண்டும் கருப்பாக மாறுமா? மருத்துவ உலகை வியக்க வைத்த உண்மையும், காரணங்களும்!

-

- Advertisement -

தலைமுடி நரைத்துவிட்டால் அதனை மீண்டும் இயற்கையான முறையில் கருப்பாக மாற்ற முடியாது என்பதே பலரின் எண்ணமாக உள்ளது. ஆனால், மன அழுத்தம் குறைந்தால் மற்றும் முறையான ஊட்டச்சத்துகள் எடுத்துக் கொள்ளப்பட்டால் நரைத்த முடி கூட மீண்டும் கருப்பாக மாற வாய்ப்புள்ளது என அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.நரை முடி மீண்டும் கருப்பாக மாறுமா? மருத்துவ உலகை வியக்க வைத்த உண்மையும், காரணங்களும்!

இது குறித்து மருத்துவர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள விழிப்புணர்வுத் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

we-r-hiring

அறிவியல் ஆய்வும் ‘டூர்’ சென்ற நபரின் வியக்க வைக்கும் மாற்றமும்
கடந்த 2021-ஆம் ஆண்டு புகழ்பெற்ற அறிவியல் ஆய்விதழான ‘ஈலைஃப்’ (eLife) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவின்படி, சில நபர்களின் முடி வளர்ச்சி மாதந்தோறும் கண்காணிக்கப்பட்டது. இதில் விடுமுறைக்கு (Vacation) சுற்றுலா சென்ற நபர் ஒருவருக்கு, சுற்றுலா சென்று திரும்பியவுடன் அவரது வெள்ளை நிற முடியின் வேர்க்கால்களில் இருந்து மீண்டும் கருப்பு நிற முடி வளரத் தொடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மன அழுத்தம் (Stress) குறையும்போது, முடியின் வேர்க்கால்களில் நிறமிகளை உருவாக்கும் செல்கள் புத்துயிர் பெற்று மீண்டும் மெலனின் (Melanin) உற்பத்தியைத் தொடங்குகின்றன என்பதை இந்த ஆய்வு மெய்ப்பித்துள்ளதாக மருத்துவர் கார்த்திகேயன் விளக்குகிறார்.

முடி ஏன் கருப்பாகிறது? நரைப்பது ஏன்?
ஒவ்வொரு முடியின் வேர்க்கால்களிலும் (Hair Follicle) ‘மெலனோசைட்’ (Melanocyte) எனப்படும் நிறமி உற்பத்தி செய்யும் ஒரு சிறிய தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இங்கு உற்பத்தியாகும் ‘மெலனின்’ (Melanin) என்ற நிறமித் துகள்கள்தான் முடிக்குக் கருப்பு உள்ளிட்ட நிறங்களைக் கொடுக்கின்றன.

சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்து (Iron), வைட்டமின் பி12, காப்பர், ஜிங்க், பயோட்டின் மற்றும் செலினியம் போன்ற சத்துகள் குறையும்போது இந்த ‘மெலனோசைட்’ தொழிற்சாலை தன் பணியைச் சரியாகச் செய்யாமல் நின்றுவிடுகிறது. இதனால் முடி வெள்ளை நிறமாக மாறுகிறது.

மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை: அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை காரணமாக உடலில் சுரக்கும் ஹார்மோன்கள், முடியின் வேர்க்கால்களில் உள்ள செல்களைப் பாதித்து நரைமுடியை ஏற்படுத்துகிறது.

சின்ன வயதில் நரை முடி வருவதற்கான காரணங்களும், எச்சரிக்கைகளும்
30 அல்லது 40 வயதுக்குப் பிறகு நரைப்பது இயற்கையானது என்றாலும், மிகச் சிறிய வயதிலேயே நரை முடி தோன்றுவதற்குப் பரம்பரை காரணங்கள் மட்டுமின்றி, ஊட்டச்சத்து குறைபாடுகளும் காரணமாகலாம். சில ஆபத்தான மருத்துவ அறிகுறிகளையும் நரை முடி காட்டக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்:

வெள்ளை முடிகளும் காது கேளாமைப் பிரச்சினையும்: குழந்தை பிறந்தது முதல் நெற்றிப் பகுதியில் ஒரு கொத்து வெள்ளை முடி இருந்தால், அது அரிதான ‘பீபால்டிசம்’ அல்லது ‘வார்டன் பர்க் சிண்ட்ரோம்’ (Waardenburg Syndrome) போன்ற மரபணுப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். இதனால் காது கேளாமைப் பிரச்சினையும் உடன் இருக்க வாய்ப்புள்ளது.

மச்சத்தில் வெள்ளை முடி: தடிமனான மச்சத்தின் மீது திடீரென வெள்ளை முடி முளைத்து, அந்த மச்சத்தின் வடிவம் மாறினால், அது ‘மெலனோமா’ (Melanoma) போன்ற தீவிரத் தோல் கோளாறுகளின் எச்சரிக்கையாக இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உடனடியாகத் தோல் மருத்துவரை அணுகுவது அவசியம்.

தீர்வுகளும் உணவு முறைகளும்
எள்ளு மிட்டாய் / எள்ளு உருண்டை: 100 கிராம் எள்ளில் இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர் மற்றும் செலினியம் ஆகிய அனைத்துச் சத்துகளும் நிறைந்துள்ளதால், இதனைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

கீரை வகைகள் மற்றும் முட்டை: முருங்கைக்கீரை, பசலைக்கீரை மற்றும் தினமும் ஒரு வேகவைத்த முட்டை, நிலக்கடலை ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

கருவேப்பிலை: கருவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பி வைட்டமின்கள் புதிய நரை முடிகள் வராமல் தடுக்க உதவும்.

பாரம்பரிய முறைகள்: வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயைத் தலையில் தேய்த்து, ஸ்கால்ப்பை நன்றாக மசாஜ் செய்து குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும். இது மன அழுத்தத்தைக் குறைத்து உடலுக்கு நன்மையளிக்கும்.

நரை முடி என்பது வெறும் அழகு சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, அது நமது உடல் ஆரோக்கியத்தின் வெளிப்பாடும் கூட என்பதால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி நல்வாழ்வு வாழ்வோம்!

டீ, காபி மோகம் உடலுக்கு ஆபத்தா? ஹீலர் பாஸ்கரின் கருத்துகளும் மூலிகை மருத்துவக் குறிப்புகளும்!

MUST READ