spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாடொவினோ தாமஸ் நடிக்கும் 'நடிகர் திலகம்'.... ரிலீஸ் எப்போது?

டொவினோ தாமஸ் நடிக்கும் ‘நடிகர் திலகம்’…. ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

டொவினோ தாமஸ் நடிக்கும் நடிகர் திலகம் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.டொவினோ தாமஸ் நடிக்கும் 'நடிகர் திலகம்'.... ரிலீஸ் எப்போது?

டொவினோ தாமஸ், மலையாள சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தமிழிலும் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றவர். அதே சமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளியான 2018 திரைப்படத்தில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார். இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்திய அளவில் பிரபலமானார்.

we-r-hiring

டொவினோ தாமஸ் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அதன்படி அஜயன்டே ரண்டம் மோசனம் என்னும் படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் IDENTITY எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இந்த படத்தில் டொவினோ தாமஸ் உடன் இணைந்து திரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.டொவினோ தாமஸ் நடிக்கும் 'நடிகர் திலகம்'.... ரிலீஸ் எப்போது?

இதற்கிடையில் டொவினோ தாமஸ், நடிகர் திலகம் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரைவிங் லைசென்ஸ் படத்தின் இயக்குனர் லால் ஜே ஆர் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இதில் டொவினோ தாமஸ், பாவனா, சௌபின் சாகிர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் 2024 மே மூன்றாம் தேதி வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ