சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.42,840-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த மாதம் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதால் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதற்கு கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதே காரணம் என தெரிகிறது. கடந்த மாதம் 21 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 41 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், அதன்பின் குறைய தொடங்கியது. ஆனால் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற தொடங்கிய தங்கம் ஒரு சவரன் 42 ஆயிரத்தை தொட்டது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.42,840- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
https://apcnewstamil.com/today-chennai-gold-price/
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ. 5,355-க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் குறைந்து ரூ.74-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 700 ரூபாய் குறைந்து ரூ.74,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
