தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் நடைபெறவுள்ள கூட்டணிக் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் நேரில் சந்திப்பு – த.வெ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அமைச்சர் நிர்மல் குமார் நேரில் சென்றார்.
காதர் மைதீனுக்கு அழைப்பு – அங்கு ஐ.யூ.எம்.எல். கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மைதீனைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், த.வெ.க. தலைவரின் சார்பில் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழை வழங்கினார்.
கூட்டணி விவகாரங்கள், வரவிருக்கும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பங்கீடுகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரின் இந்த நேரில் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெறும்! – இ.பி.எஸ் அதிரடி நம்பிக்கை!
