spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎச்.வினோத் - கமல் கூட்டணியில் படம்... அதிகாரப்பூர்வமாக கைவிடப்பட்டதாக தகவல்....

எச்.வினோத் – கமல் கூட்டணியில் படம்… அதிகாரப்பூர்வமாக கைவிடப்பட்டதாக தகவல்….

-

- Advertisement -
கோலிவுட், டோலிவுட், மோலிவுட், சாண்டல்வுட், பாலிவுட் என இந்திய திரை உலகை தாண்டி உலக நாயகனாக கொண்டாடப்படும் ஒப்பில்லா நாயகன் கமல்ஹாசன். கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன் இடைவௌி கூட இல்லாமல், அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக அவரது நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்டம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது

இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்து, எச் வினோத் இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகினார். இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. அடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்திலும் அவர் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தக் லைஃப் என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ் மட்டுமன்றி பாலிவுட்டில் பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்திலும் அவர் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அண்மையில் ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பு மற்றும் அறிவு இயக்கும் படத்திலும் அவர் நடிக்கிறார்.

இந்நிலையில், எச். வினோத் இயக்கும் திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில், இந்த திரைப்படங்களை தயாரிக்கும் ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட பட்டியலில், எச். வினோத் படம் இடம்பெறவில்லை. சிம்பு, சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் பட்டியல் அதில் இடம்பெற்றிருந்தது. இதனால், அத்திரைப்படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது.

MUST READ