HomeBreaking News“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!

“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!

-

- Advertisement -

நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், நடிகை அம்பிகா வளசரவாக்கத்திலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது சகோதரர் மல்லிகார்ஜுனன் மற்றும் வழக்கறிஞர் பழனிவேல்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

we-r-hiring

அப்போது பேசிய அம்பிகா, “இப்படி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துவேன் என்று நான் என் வாழ்நாளில் எதிர்பார்க்கவில்லை. என் சகோதரி புகார் அளித்துள்ளார். என் மீது ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு தொகை சொல்கிறார்கள். நிறைய பேருக்கு கேள்விகள் இருக்கலாம், ஏன் அம்பிகா பேசவில்லை என? நான் படப்பிடிப்பில் இருந்தேன். இன்று அதிகாலை 3 மணிக்குத்தான் வந்தேன்.

காசோலை கொடுத்தது உண்மை. நிறுத்தி வைத்தது உண்மை. அவர் செய்தார்.

ஏ.ஆர்.எஸ். கார்டன் குறித்து பேச எம்.ஜி.ஆர். அவர்களை சந்தித்தோம். அவர் தான் உங்களை பெயரை வையுங்கள் என்றார்.

ஏ.ஆர்.எஸ். கார்டன் எங்களுக்கு குழந்தை போல். நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தது. திடீரென ஒரு நாள் பார்க்கும் போது பெயர் பலகை மாற்றப்பட்டிருந்தது. அதில் என்னுடைய பங்கு அதிகமுள்ளது.

ஜூலை மாதம் மதுரவாயிலில் புகார் அளித்தோம். சி.எஸ்.ஆர். கொடுத்துள்ளார்கள். அவர்கள் வழக்கிற்கு ஒத்துழைக்கவில்லை.

வருமான வரி சோதனையில் தங்கம் கிடைத்தது. அது குறித்து கேட்டோம். தங்கம் என்றாலே ராதாவிற்கு ஆசை, ஈர்ப்பு உள்ளது. அது குறித்து கேட்க முற்பட்டபோது தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். தொடர்பு கொள்ள இயலவில்லை.

அவருடன் ஒரு அல்லக்கை உள்ளது. மிகவும் கவனமாக மனிதர் என் தங்கை. கைப்பையை கூட கவனமாக வைத்திருப்பார். அப்படிப்பட்டவர் எப்படி காசோலையை விட்டுவிடுவார்?

இவ்விவகாரத்தில் மேலும் செல்லும்போது ராதாவிற்குத்தான் சிக்கல். தவறு செய்துவிட்டு அவர்களே முந்திக்கொள்வதைப் போல் செய்கிறார்கள்.

காசோலை கொடுத்தது ராதா. நிறுத்தி வைத்தது ராதா. பவுன்ஸ் ஆனது எனக்கு, பணம் போனது எனக்கு. அப்படியானால் நான் தான் வழக்கு கொடுக்கவேண்டும்.

இவ்விவகாரம் வெளியே தெரியவேண்டாம், குடும்ப விவகாரம் என நினைத்தோம். ஆனால் அவர் அப்படி நடந்துகொள்ளவில்லை.

கமிஷனரை பார்த்து புகார் அளித்தோம். மதுரவாயல் காவல் நிலையத்திலிருந்து அழைத்தும் ராதா பேசவில்லை.

அவரது மகள் திருமணத்தில் ஒரு வேலைக்காரி போல் நடந்துகொண்டேன். என்னை போன் எடுக்கவில்லை என்கிறார்.

என்னுடைய அறையில் தூங்கும்போதும் கைப்பையை கூட லாக் செய்வார்.

இவ்வீட்டிற்கு வரவில்லை என்றால் அருகிலே அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடுகள் வாங்கியுள்ளார். அதனால் இங்கு வரவில்லை. மேலும் அவருக்கு குற்ற உணர்வு இருக்கும். அதனால் வரவில்லை.

எங்கள் அம்மா இருக்கும் போது ஏ.ஆர்.எஸ். கார்டன் வாடகை குறித்து ஏதும் பேசவில்லை.

ஏ.ஆர்.எஸ். கார்டன் முறையாகப் பிரிக்கப்படவில்லை. ஏ.ஆர்.எஸ். கார்டனை ராதா அபகரித்துவிட்டார். மொத்தமாக ரூ.97 கோடி வரவேண்டியுள்ளது.

அம்பிகா அவர்கள் விலகிக்கொண்டது போல் சான்றிதழ் தயாரித்துள்ளார்கள். வங்கியில் கடன் வாங்கியுள்ளார்கள். பார்ட்னர்ஷிப்பில் நான் இருக்கையில் எப்படி அவரால் வாங்க முடியும்?

எங்களின் புகாரை மறைக்க அவர்களே தயார் செய்து கொடுத்து புகார் இது. காவல்துறை அழைத்தபோது போகாமல் இப்போது செல்கிறார்கள்.

ஏ.எஸ்.ஆர். கார்டனை ரிசார்ட்டாக மாற்ற வேண்டும் என நினைத்தார்கள். திருவனந்தபுரத்தில் ஸ்டார் ஹோட்டல்கள், பங்களா வீடு உள்ளது. கன்வென்ஷன் சென்டரில் ஒரு நாளுக்கு லட்சக்கணக்கான வருமானம் வரும். அதில் இவ்வாறு பல ஆயிரம் கோடி சொத்து உள்ளது. அதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் எங்களுக்கும் உரிய சொத்தில் ஏன் இவ்வாறு செய்கிறார்?

எங்கள் அம்மா நாங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என எண்ணினார். ஆகையால் சமரசம் செய்ய பேச நினைத்தால் பேசுவோம்.

ராதா தான் என்னுடைய நல்ல தோழி என்று ஏற்கனவே சொல்லியுள்ளேன். அவராக செய்யவில்லை. அவரது கணவர் உள்ளிட்டோர் சொல்வதை கேட்டு இவ்வாறு நடக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பில் கண் கலங்கிய அம்பிகா, தனது இன்ஸ்டாகிராமில் ‘படிக்காதவன்’ படத்தில் வரும் “பணம் காசக் கண்டுபுட்டா புலிக்கூட புல்லைத் தின்னும்” என்னும் பாடலை ராதாவிற்குத்தான் இன்ஸ்டாகிராமில் வைத்தேன் என்றார்.

திருடியதாக சொன்னதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சின்ன வயதிலிருந்து என் சகோதரிகளுக்காக நிறைய செய்துள்ளேன்.

திருடியதாக சொல்கிறார். அவரது கணவர் ஒருமையில் பேசுகிறார். என்னை பேச அவர் யார்? என்னாலும் பேச முடியும். இருப்பினும் என் தங்கை மீது வைத்துள்ள மரியாதைக்காக பேசவில்லை” என்று கண்ணீர் மல்க பேசினார்.

ராதா மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும்.

வழக்கு விசாரணையில் உள்ளதால் இது குறித்து பேசவில்லை என நினைக்காதீர்கள். தவறாக எண்ண வேண்டாம். சட்டரீதியாக நடப்பதால் இது குறித்து இதற்கு மேல் பேசப் போவதில்லை. அது வழக்கின் திசையை மாற்றலாம். ஆகையால் தான் பேசப் போவதில்லை.

தயவு கூர்ந்து தவறாக யாரும் பேசாதீர்கள்.

ஏ.ஆர்.எஸ். கார்டன் பெயர் பலகை மாற்றப்பட்டதை நினைத்தால் எனக்கு தூக்கம் வரவில்லை. நெஞ்சு வலிப்பதைப் போல் உள்ளது. அதனை பார்க்கையில்…” என்று அம்பிகா தெரிவித்தார்.

பிரபாஸின் ‘ஃபவுஸி’ படத்திற்கு திடீர் பின்னடைவு! டிசம்பர் 3 ரிலீஸ் தள்ளிவைப்பு – புதிய தேதி எப்போது?

MUST READ