HomeBreaking Newsஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை!

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை!

-

- Advertisement -

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். நூல் கொள்முதல் தொடர்பாக எழுந்துள்ள முறைகேடு புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை!

நூல் கொள்முதல் தொடர்பான கோப்புகள் சேகரிப்பு

we-r-hiring

நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், நூல் கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கோப்புகளைச் சேகரிக்கும் பணியிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியாகவும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சோதனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

விசாரணையின் முடிவில் கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

MUST READ