HomeBreaking Newsஅனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி! தகுதியான கடன்களுக்கான காலக்கெடுவை நீட்டித்து முதலமைச்சர் விஜய்...

அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி! தகுதியான கடன்களுக்கான காலக்கெடுவை நீட்டித்து முதலமைச்சர் விஜய் உத்தரவு – ரூ.9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தகுதியான பயிர்க்கடன்களின் காலவரையறையை நீட்டித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி! தகுதியான கடன்களுக்கான காலக்கெடுவை நீட்டித்து முதலமைச்சர் விஜய் உத்தரவு – ரூ.9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு!

அதன்படி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் தகுதி பெறும் கடன்களுக்கான காலவரம்பு 01.05.2025 முதல் 31.03.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இதன் மூலம் குறிப்பிட்ட காலகட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளும் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ஒட்டுமொத்தமாக ரூ.9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளிடையே கவனம் பெற்றுள்ளது.

 

MUST READ